2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அலங்கார மீன்களுடன் நபர் ​​கைது

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அலங்கார மீனினங்கள் சிலவற்றுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மீன்களை மிகவும் பாதுகாப்பான முறையில் பொதி செய்து, விமான நிலையத்திலிருந்து எடுத்து செல்ல முற்பட்ட வேளையிலேயே சுங்கப்பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்நபர் இன்று (20) அதிகாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மீன்களின் பெறுமதி 4 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமானதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .