2025 ஜூலை 05, சனிக்கிழமை

’’அலுவலகம் இல்லாவிட்டாலும், மக்கள் சேவை தொடரும்’

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை, மக்களுக்காக முன்னெடுக்கும் பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வருடம், தேர்தல் வரு​டமென்பதால், அதற்கு முகங்கொடுக்க, தனது முகாமை பலப்படுத்தி வருவதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .