2025 மே 09, வெள்ளிக்கிழமை

அவிசாவளை கொலை: ஊடகவியலாளர் உட்பட நால்வர் கைது

Simrith   / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவிசாவளை, இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினர் மீது ஆயுதம் ஏந்திய துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகமானது பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 'மன்னா ரமேஷ்' என்பவரால் திட்டமிட்டு நடாத்தப்பட்டதாகவும் அவர் தற்போது டுபாயில் இருப்பதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான குறித்த ஊடகவியலாளர், மன்னா ரமேஷிற்கு தகவல்களை வழங்கி கொலையை செய்ய உதவி புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த ஊடகவியலாளரை பொலிஸார் மீகொடையிலுள்ள அவரது  இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் கடந்த சில நாட்களாக மன்னா ரமேஷிற்கு பலமுறை அழைப்புகளை மேற்கொண்டிருப்பதாக அவரின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதித்த போது தெரிய வந்துள்ளது.

சந்தேகிக்கப்படுகின்ற ஊடகவியலாளரின் வங்கிக் கணக்கிற்கு மன்னா ரமேஷ் பல தடவைகள் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் மற்றும் துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய மேலும் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X