2025 மே 21, புதன்கிழமை

அவன்காட்டுடன் விஜயதாஸவுக்கு விசேட தொடர்பா?

Kogilavani   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித் சிறிவர்தன

அவன்ட் காட் நிறுவனத்துடன், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்குத் தொடர்புகளெவையும் காணப்படுகின்றனவா எனக் கேள்வியெழுப்பிய  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவ்வாறான தொடர்புகள் காணப்பட்டால், அவை குறித்து 48 மணிநேரத்துக்குள் வெளிப்படுத்துமாறு கோரியுள்ளார்.

அந்நிறுவனத்துடன் தொடர்புகளெவையும் காணப்படவில்லையென அவர் தெரிவிக்கின்ற போதிலும், அவ்வாறான தொடர்பு காணப்படுவதாகத் தான் சந்தேகிப்பதாக பொன்சேகா தெரிவித்தார்.

'அவன்ட் காட் நிறுவனத்துடன் ஏதாவது தொடர்புகள் காணப்படுகின்றனவா என்பதை வெளிப்படுத்துமாறு, அமைச்சர் ராஜபக்ஷவை நான் கோருகின்றேன். அவ்வாறு தொடர்பு இருக்குமாயின், எவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருந்தார்? அவன்ட் காட் உரிமையாளருடன் அவர், விசேடமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என நான் சந்தேகிக்கிறேன். அவ்வாறான தொடர்புகள் இருந்தனவா என, அடுத்த 48 மணித்தியாலத்துள் வெளிப்படுத்துமாறு நான் கோருகிறேன்' என்றார்.

அமைச்சர் விஜயதாஸ, 500 மில்லியன் ரூபாய் கோரிக்கைக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த பொன்சேகா, அது குறித்து அஞ்சவில்லை எனவும் தெரிவித்தார்.

தற்போது, அவன்ட் காட் நிறுவனம் தொடர்பாக எவரும் கதைப்பதில்லை எனத் தெரிவித்த அவர், அந்நிறுவனத்துக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர், நீதியமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கோருவதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .