Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Simrith / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எனது கொள்கைகளுக்குட்படாத அனைவரும் எனது எதிரிகள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கங்காராமய ஆலய நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
”எனது கொள்கைகளுக்குட்படாதவர்கள் என்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் நான் பொதுவான எதிரியாக மாறியுள்ளேன் ” என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறித்து வினவிய போது, அவருடன் தான் ஒரு சந்திப்பில் ஈடுபட்டு தேனீர் அருந்தியதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்கவின் நினைவு தினமான கடந்த செவ்வாய்க்கிழமை (26) முன்னாள் ஜனாதிபதிகளிருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
”ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களாக நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். மேலும் எங்களுக்குள் எவ்வித பிரச்சினைகளும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி குறித்து வினவிய போது அவருக்கெதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று சபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என மைத்திரி தெரிவித்தார்.
நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. ஆனால் தயாசிறி தான் எங்களுக்கெதிராக நீதிமன்றம் சென்றார். எனவே அவர் வழக்கை மீளப்பெற்று விட்டு எம்முடன் பேசலாம். குற்றப்பத்திரிகையிலுள்ள விடயங்களை பேசித் தீர்மானித்து மீண்டும் எம்முடன் அவர் பணி புரியலாம். அதில் எந்தத் தடங்கலும் இல்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago