2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 16 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அகழ்வாய்வுப்பணிகளை ஒக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்படுகின்றன என  முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .