Editorial / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

தங்கள் ஆசனவாய் மற்றும் பொதிகளில் மறைத்து வைத்து சீனாவிற்கு ரூ.32 மில்லியன் மதிப்புள்ள ரத்தினக் கற்களை கடத்த முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவால் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் 38 மற்றும் 39 வயதுடைய ரத்தினக் கற்கள் வணிகர்கள், பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சீனாவின் செங்டுவுக்குச் செல்லும் சீனா ஏர்லைன்ஸ் விமானத்தில் CA-426 ஏறுவதற்காக இருவரும் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று இரவு 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இருவர் மீதும் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், அவர்களைச் சோதனையிட்டபோது ரத்தினக் கற்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்த ரத்தினங்களில், ப்ளூ சஃபையர், பத்மராச்சா, ஸ்பைனல், ரூபி, க்ரைசோபரி, சாவோரைட், கார்னெட், கேட்ஸ் ஐ, மூன்ஸ்டோன், டூர்மலைன் மற்றும் ஸ்டார் ஷேப்பர் ஆகிய முக்கிய ரத்தினக் கற்களின் 756 கரட் எடையுள்ள 390 ரத்தினக் கற்கள் இருந்தன.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் இருவரையும் தடுத்து வைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025