Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர
ஆனமடுவ வாராந்த சந்தை விவகாரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, இன்று (16) ஆனமடுவ பிரதேச சபை கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
ஆனமடுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம் ராஜகருணா தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. இதன்போது வாராந்த சந்தை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்ட போதே, இரு தரப்புக்கிடையில் ஏற்பட்ட கருத்து பறிமாற்றல்களால் சபையில் அமைதியின்மை நிலவியது.
ஆனமடுவ நகரிலுள்ள பழைய சந்தைக் கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, வேறு இடத்தில் வாராந்த சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன், அவ்விடத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக, வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது தொடர்பில் சபையில் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில், தற்போது வாராந்த சந்தை இடம்பெற்றுவரும் தற்காலிக இடத்தை நீக்கி வேறு இடத்துக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என, தங்களது நிலைப்பாட்டை அறிவித்ததும், ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சபையில் அமைதியின்மை நிலவியது.
இதனையடுத்து தவிசாளர் வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்தார். வாக்கெடுப்பில் ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. ஜே.வி.பி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்கெடுப்புக்குப் பின்னரும் சபையில் அமைதியின்மை நிலவினாலும், இரு தரப்பினரும் பின்னர் கலந்துரையாடி சுமுகமான முடிவுக்கு வந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago