2025 மே 08, வியாழக்கிழமை

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா அறிக்கை

Editorial   / 2025 மே 07 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஆபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையை இந்திய பாதுகாப்பு படை இன்று (07) அதிகாலை ஆரம்பித்து, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

2.    மொத்தமாக ஒன்பது (9) பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.

3.    இந்தியாவின் நடவடிக்கைகள் துல்லியமானவை, அத்துமீறல் இல்லாதவை அத்துடன் குறித்த இலக்குகள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் எந்தவொரு பாகிஸ்தானிய இராணுவ நிலைகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், தாக்குதலை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் கடைபிடித்துள்ளது.

4.    25 இந்தியர்களும் ஒரு நேபாளத்தைச் சேர்ந்தவரும் கொல்லப்பட்ட இரக்கமற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X