Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், நேற்று (17) நாடாளாவிய ரீதியில் 137,221 நபர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
எனினும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை 285,288 நபர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் அறிக்கையின் படி, நேற்றைய நாளில் 103,846 பேர் சினோர்ஃபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ள அதேவேளை, 21,685 பேர் சினோர்ஃபாமின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், அஸ்ட்ரா செனெகாவின் இரண்டாவது டோஸை 237 பேர் பெற்றுள்ள நிலையில் 7,712 பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.
3,415 பேர் ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும், 116 பேர் முதல் டோஸையும் பெற்றுள்ளனர்.
இம்மாதத்தின் ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வந்த நிலையில், இத்தொகை தற்போது சடுதியாக குறைந்து சுமார் 1 இலட்சம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
கொவிட் 19 ஒழிப்பு சிறப்புச் செயலணியுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
11 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
52 minute ago