2025 மே 01, வியாழக்கிழமை

ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் கைது

Simrith   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுத் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை விசேட அதிரடிப் படை (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று ஏப்ரல் 19 ஆம் திகதி கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதுடன் அப்போது, ​​முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஐந்து சந்தேக நபர்களை விசாரணையின் போது சிறப்புப் படையினர் கைது செய்தனர்.

விசாரணையில், அந்தக் குழு "கம்பஹா ஒஸ்மான்" என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .