Editorial / 2021 ஜனவரி 05 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான ஆரோக்கிய துவாய் தொடர்பில், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தான் முன்வைத்த யோசனையின் பேரில் என்னை இழிவுபடுத்தினர் எனத் தெரிவித்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, காலந்தாழ்த்தியேனும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்; அதனூடாகப் பெண்களுக்குச் சிறந்த சுகாதாரத்தை வழங்க முடியும் என்றார்.
இந்தத் திட்டத்தை முதலில், பாடசாலை மாணவிகளுக்கு அறிமுகம் செய்யவேண்டும். அதன்பின்னர், நாட்டின் சகல பெண்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று (04) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'ஐக்கிய மக்கள் சக்தியானது முற்போக்கு அரசியல் கட்சி என்ற அடிப்படையில், மக்களின் நலனுக்காகச் செயற்படுவது தான் அதன் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பெண்களின் சுகாதார விடயம் சார்ந்து, இந்தக் கொள்கையை முன்வைத்தோம்' என்றார்.
ஆரோக்கிய துவாய் திட்டத்தை முன்வைத்த போது, அன்றிருந்த எதிர்த் தரப்பினர், மோசமான விதத்தில் என்னை இழிவுபடுத்தினர். எமது நாட்டின் மொத்த சனத் தொகையில் 58.1 சதவீதமானோர் பெண்கள். சுமார் 42 இலட்சத்துக்கும் 57 இலட்சத்துக்கும் இடைப்பட்ட பெண்கள், இந்தச் சுகாதார பிரச்சிணைக்கு மாதாந்தம் முகம் கொடுக்கின்றனர்.
இதனால், பல சுகாதாரப் பிரச்சினைகளைப் பெண்கள் எதிர் நோக்குகின்றார்கள். ஆரோக்கிய துவாய் பயன்பாடு இன்மையால், பல நோய்களுக்கு இவர்கள் முகம் கொடுப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், ஆகையால் பெண்களுக்கான சுகாதார விடயத்தில் அரசாங்கம் அதிசிரத்தையுடன் நடந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026