2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆர்யனால் கோடிகளை இழக்கும் ஷாருக் கான்

Freelancer   / 2021 ஒக்டோபர் 09 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரைச் சேர்ந்த ஒன்லைன் கற்றல் நிறுவனமான பைஜூஸ், தனது நிறுவனத்துக்காக ஷாருக் கான் நடித்த விளம்பரப் படங்களை நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது அவருடைய மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்நிறுவனம் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் பைஜூஸ் நிறுவனத்துக்கான விளம்பர தூதுவராக அவர் நடித்து வந்ததுடன், இதற்காக ஆண்டுதோறும் 4 கோடி இந்திய ரூபாய் வரை சம்பளமாக வாங்கியுள்ளார்.

பைஜூஸ் நிறுவனம் குறுகிய காலத்திலேயே அதீத வளர்ச்சியை அடைந்ததற்கு ஷாருக் கானின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள சார்ச்சையால், ஷாருக் கான் நடித்த விளம்பரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

எனினும் அவர் தொடர்ந்து அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிப்பாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும் என்றும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .