2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஆற்றங்கரைகளில் வாழ்வோருக்கு எச்சரிக்கை: போக்குவரத்து நெரிசல்

Kanagaraj   / 2016 மே 16 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீரேந்தும் பிரதேசங்களில் மழைவீழ்ச்சி அதிகம் கிடைப்பதனால் பிரதான மற்றும் சிற்றாறுகளின் கரையோரங்களில் வாழ்வோர் மிகமிக அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தாழ்நில வீதிகளில், வெள்ளநீர் தேங்கியிருப்பதனால், கொழும்பு உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மண்சரிவு ஏற்பட்டமையால் அவிசாவளை-கேகாலை வீதியில் கடும் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது. ஹோக்கந்தர சந்தி முதல் தலவத்துகொட சந்திவரையிலான பகுதிகளில் வாகனங்கள் நகரவில்லை.

இதேவேளை, களனிவெளி ரயில்சேவைகள் தாமதமடைந்துள்ளன என்று ரயில் பயணிகள் தெரிவிக்கின்றன.

அவிசாவளையிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அலுவலக ரயில், அரைமணிநேரம் தாமதமாகியுள்ளது என்றும் தெரியவருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X