Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 07 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரணம் கண்டறியப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் தொடர்பான சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளை கோருவதற்காக உலக சுகாதார நிறுவனம் மற்றும் சிறுநீரக நோய் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணி ஆகியன ஒன்றிணைந்து நடத்திய செயலமர்வின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
காரணம் கண்டறியப்படாத நாற்பட்ட சிறுநீரக நோயானது இலங்கை உட்பட மேலும் பல நாடுகளில் விசேடமாக மத்திய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பாரதூரமான சுகாதார பிரச்சினையாக காணப்படுகின்றது. வெப்பமான காலநிலையுடன் தமது வாழ்வினை கழிக்கும் விவசாயிகளே இந்நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 ஆண்டு காலத்துக்கும் மேலாக இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் எவ்வளவுதான் ஆய்வுகளை மேற்கொண்டபோதிலும் இந்நோய் தொடர்பான பிரச்சினை இன்னும் தீரவில்லை.
இந்நிலைமையின் கீழ் உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை அலுவலகமும் சிறுநீர் நோய்த் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியும் இணைந்து இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்காக வழிகாட்டுதலை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் செயலமர்வு இடம்பெற்றது.
நோய்த்தடுப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான ஆய்வுகளுக்கான முன்னுரிமை மற்றும் செலவு தலையீட்டினை அடையாளம் காணல் இச்செயலமர்வின் இலக்காகக் காணப்பட்டது. இலங்கையை போன்றே பூகோள ரீதியில் இதுதொடர்பாக உள்ள அறிவினை மீளாய்வு செய்தல், குறைபாடுகளை இனங்காணல், விடயங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆய்வுகளின் முன்னுரிமையை இனங்காணல் மற்றும் தற்போதுள்ள சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு தலையீட்டு முன்னுரிமையினை இனங்காணல் என்பன இதன் நோக்கமாக காணப்பட்டது.
அவ்வாறே இறுதி பரிந்துரையை அமுல்படுத்துவதற்கான மேற்பார்வை மற்றும் பொறுப்பு கட்டமைப்பை அனைவரதும் இணக்கப்பாட்டுடன் கட்டியெழுப்புதல் இதன் மற்றுமொரு இலக்காக காணப்பட்டது.
மருத்துவ சிகிச்சையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், நோய் பரவுதல் தொடர்பான நிபுணர்கள், விவசாய நிபுணர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்களை உள்ளடக்கிய சர்வதேச மற்றும் உள்நாட்டு அறிஞர்கள் 54 பேர் கலந்துகொண்ட இச்செயலமர்வில் இலங்கை, இந்தியா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா,கியுபா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago