2025 மே 21, புதன்கிழமை

ஆளும் தரப்பினருக்கு அறிவுறுத்தல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நாளை 2ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், அமைச்சர்கள், கட்டாயம் பிரசன்னமாய் இருக்கவேண்டும் என்று அவை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மட்டுமன்றி, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் பிரச்சன்னமாய் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமையவே, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளமையால், அனைவரும் கட்டாயம் அன்றையதினம் மாலை 3 மணிக்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருமாறும் அவர், தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X