2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இ.போ.ச சாரதிகளின் விடுமுறைகள் இரத்து

Gavitha   / 2016 நவம்பர் 30 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பணியாற்றும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பஸ் ஊழியர்கள் நாளை முதலாம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளமையால், அவர்களது பரீட்டைசக்கு தடையாக இருக்க வேண்டாம் என்றும் இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றும் இலங்கை அதிபர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .