2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இடைநிறுத்தினாலும் இல்லாமல் போகாது

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றத்தில் களேபரம் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பிரதியமைச்சரும் ஐ.தே.கவின் களுத்துறை மாவட்ட எம்.பியுமான பாலித தெவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட எம்.பி.யான பிரசன்ன ரணவீர ஆகிய இருவருக்குமான இடைநிறுத்த உத்தரவு, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும்.

அவ்விருவருக்கும் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில், ஒரு வாரகால தற்காலிக இடைக்கால உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் நிறைவடைகின்றது.

இன்று ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்றம், இம்மாதம் 17ஆம் திகதியன்று மீண்டும் கூடும். அப்படியாக இருந்தாலும், இந்த ஒருவாரக் காலத் தடையானது, நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களை அடிப்படையாகக் கொண்டது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயக காரியாலயம் தெரிவித்தது.  இதேவேளை, நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத் திட்டத்துக்குள் இணைத்துக்கொள்ளப்படும் போது, இந்த இடைநிறுத்தக் காலம் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என்றும் ஓய்வூதியம் இல்லாமல் போகாது என்று முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

எட்டாவது நாடாளுன்றத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில், கம்பஹா மாவட்ட எம்.பியான பிரசன்ன ரணவீரவும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, தன்னை ஒருவார காலம் இடைநிறுத்தியமை சட்டவிரோதமானது. இது நிலையியற் கட்டளைகளுக்கு விரோதமானது என்பதுடன் அநீதியான தீர்ப்பாகும் என்று சுட்டிக்காட்டி, ரணவீர பிரசன்ன எம்.பி, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X