2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இடைக்காலக் கணக்கறிக்கையை ’சமர்ப்பிப்பது வேடிக்கையானது’

Editorial   / 2018 நவம்பர் 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்காலக் கணக்கறிக்கையை சமர்ப்பிக்கப் போவதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளமை, வேடிக்கையானதெனத் தெரிவிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க எம்.பி, மக்கள் பணத்தை நாசம் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அலரி மாளிகையில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றில், இம்மாதம் 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிறுவப்பட்ட அமைச்சரவை இரத்தாகிவிட்டது எனத் தெரிவித்த நிலையில், அத்தரப்பால் இடைக்காலக் கணக்கறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதெனத் தெரிவிக்கப்படும் கருத்து, வேடிக்கையானது என்றார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு முன்பு, பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள் என, மஹிந்த தரப்பினருக்குச் சவால் விடுத்த அவர், பிரதமரின் செயலாளரின் நிதிச் செலவீனங்களை முடக்குவதற்கான பிரேரணை, நாடாளுமன்றில் இன்று (29) சமர்பிக்கப்பட உள்ளதென்பதை ஞாபகப்படுத்தினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "ஏற்கனவே நாம் செய்ததுபோல, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கான ஒழுங்குப் பத்திரங்களை இரத்துச் செய்து, இடைக்காலக் கணக்கறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில், எங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நாளை (இன்று) நிரூபிக்க முடியும். மஹிந்த தரப்பினர், 90 நாடாளுமன்ற உறுப்பினர்களாவது அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா என்பதை, நாடாளுமன்றில் நிரூபிக்க முடியுமா?" எனக் கேள்வியெழுப்பினார்.

இயலுமானால், சபாநாயகர் கரு ஜயசூரிய மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருமாறு சவால் விடுத்த அவர், தன் மீதான அவ்வாறான பிரேரணையை மகிழ்வுடன் ஏற்பதாக, சபாநாயகர் தெரிவித்தமையைச் சுட்டிக்காட்டிய அவர், எனவே மஹிந்த அணியினர், அதனை ஏன் செய்யவில்லையென்றும் கேள்வி எழுப்பினார்.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .