R.Maheshwary / 2021 ஜூன் 09 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத்தில் விளம்பரம் செய்து, 15 வயது சிறுமியை விற்ற நபர் ஒருவர் கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கல்கிஸ்ஸ பிரதேச தொடர்மாடி வீடொன்றை வாடகைக்கு எடுத்து, குறித்த சிறுமியை அங்கே தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் புகைப்படத்துடன் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு அமைய, பிரிதொரு நபருக்கு அச்சிறுமி விற்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சிறுமி, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், சிறுமியின் தாயாரிடமிருந்தே, சந்தேகநபர் சிறுமியைப் பெற்று கல்கிஸ்ஸ பிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில், சிறுமியின் தாயாரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago