2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதய நோயால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு  கூறினார்.

2020ஆம் ஆண்டில் மாத்திரம் அரச வைத்தியசாலைகளில் 52 சதவீதமானோர் இதய நோயால் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. 

18 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் பெண்களும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இதய நோயாளியை விரைவாகக் கண்டறியும் வழிமுறைகளை கல்வி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒலி மாசுபாடு இதய நோய்க்கான முக்கிய காரணமாகும் என்பதுடன், மன அழுத்தங்களும் இதய நோய்க்கு காரணமாக காணப்படுகின்றது.

எனவே, உடலில் வலி ஏற்படல் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மார்பு சோர்வு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர் வைத்தியர் அனிது பத்திரண கூறியுள்ளார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X