2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இதுவரையில் 3,743 டெங்கு நோயாளர்கள் பதிவு

Editorial   / 2019 ஜனவரி 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த வருடத்தில் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலம் வரை, 3,743 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாடு முழுவதும் நாளாந்தம் 500 முதல் 600 வரையான டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே, அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தையடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகமானத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் வட மாகாணத்தில், கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, தற்போது வடமாகாண மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .