Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி வசித்து வந்த வீட்டிலுள்ள குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும் அதனுடன் சேர்ந்து தவறி விழுந்துள்ள உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை வெரோனா நகர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்த நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றதாகவும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்லும் நோக்குடன் இலங்கைக்கு திரும்பி வரவிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
8 hours ago