2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை பெண்கள் கடத்தல்

George   / 2016 நவம்பர் 26 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைப் பெண்களை வெளிநாட்டுக்கு கடத்தும் பெரியளவிலான வியாபாரம் தொடர்பான தகல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இந்த தகவல் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு, இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்த 6 பெண்கள், சுற்றுலா விசாவின் ஊடாக டுபாய் செல்வதற்காக வந்திருந்தனர்.

அவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள், பெண்களை சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, பெண்களிடம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு 6 இருந்துள்ளதுடன், அதில் இலங்கை பெண்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை கடவுச்சீட்டுகள் 6, குறித்த பெண்களிடம் இருந்துள்ளதுடன், பணியகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் விசாரணையில் இருந்து தப்புவதற்காக இந்திய கடவுசீட்டுகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வியாபாரத்தில் ஈடுபடும் நபர் தொடர்பில், பெண்களின் ஊடாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களான 6 பெண்களும் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .