Editorial / 2025 நவம்பர் 26 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இந்திய எல்லையோரம் அமைந்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த போபட் குமார் (வயது 24) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த கவுரி (வயது 24) ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், அவர்களின் காதலுக்கும் திருமணத்திற்கும் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான காதல் ஜோடி, செவ்வாய்க்கிழமை (25) அன்று இரவு வீட்டை விட்டு ஒளிந்து வெளியேறி, சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இருவரும் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் ரபர் பகுதியில் சட்டவிரோதமாக எல்லை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் இருந்த இந்திய எல்லைப்பாதுகாப்புப் படை (BSF) வீரர்கள், சந்தேக நிலைமையில் இருந்த இவ்விருவரையும் சோதனைக்காக நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணத்திற்குச் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக இருவரும் ஒப்புக்கொண்டதாக BSF அதிகாரிகள் கூறினர்.
பின்னர்,காதல் ஜோடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சட்டவிரோத எல்லை தாண்டல் குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
3 minute ago
9 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
26 minute ago
28 minute ago