2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’இந்த ஆட்சியில் தீர்வு கிட்டாது’

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரோ, தீர்வுத் திட்டமொன்றைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தனக்குக் கிடையாதென்றும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புத் தொடர்பான அறிக்கை, பல்வேறு படிமுறைகளைத் தாண்டவேண்டி இருப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் எஞ்சியுள்ள ஆயுட்காலத்துக்குள், அது நிறைவேறச் சாத்தியம் இருக்குமென்று தான் நினைக்கவில்லை என்றும், அகில

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

 வவுனியா கலாசார மண்டபத்தில், நேற்று மாலை (24) அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து, தென்னிலங்கையில் மிகவும் மோசமான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டு வருவதாகவும் நாட்டைப் பிரிக்கும் அளவுக்கான இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.  

எனவே, இந்த நாட்டிலே இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டு நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமெனில், மூவின மக்களதும் பிரதிநிதிகளும், மனம்விட்டுப் பேசி, எல்லோருக்கும் பொருத்தமான ஒரு தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட்டு, அதனை நாடாளுமன்றத்துக்க கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் இதுவே காலத்தின் தேவையாக இருக்கின்றது என்றும், அவர் மேலும் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .