2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்திய காலனித்துவ எதிர்ப்பு: தடையுத்தரவு நிராகரிப்பு

Editorial   / 2024 மார்ச் 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய காலனித்துவத்துக்கு எதிராக” என்ற தலைப்பில் முன்னிலை சோசலிசக் கட்சி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் பேரணியை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ்   நிராகரித்துள்ளார்.  

  நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் சரத்துக்களால் தணிக்கை செய்ய முடியாது என பிரதான நீதவான் சுட்டிக்காட்டினார்.

 

பேச்சுரிமை, ஒன்றுகூடல் சுதந்திரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் 14வது சரத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் உத்தரவை நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது எனவும், அணிவகுப்பு அல்லது போராட்டத்தை தடுப்பதற்கு போதுமான உண்மைகள் நீதிமன்றத்தின் முன் இல்லை எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போராட்டத்தின் மூலம் ஒடுக்குமுறைச் சூழலை உடனடியாகத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X