Editorial / 2026 ஏப்ரல் 15 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எச்.எம். சியாஜ்
மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை (04) ஒரு படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திங்கட்கிழமை (13) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் பிடிக்கப்பட்டனர்.
மன்னாருக்கு வடக்கே இலங்கையின் கடல் எல்லைக்குள் பல இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை வட மத்திய கடற்படை கட்டளையகத்தினர் திங்கட்கிழமை இரவு அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த படகுகளை இலங்கைக் கடல் பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்காக கடற்படைக் கப்பல்கள் மூலம் விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஏனைய படகுகள் வெளியேறிய நிலையில், தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு படகை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
கடல் எல்லைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், அந்தப் படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களின் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
6 minute ago
17 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
36 minute ago
47 minute ago