Editorial / 2022 மே 08 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடனுதவி திட்டங்களின்கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர்த்தாரை வாகனம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இவ்வாறான செய்தி அறிக்கைகளில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லையென இலங்கையிலுள்ள இந்திய இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு கடனுதவி திட்டங்களின்கீழும் நீர்த்தாரை வாகனங்களெதுவும் இந்தியாவால் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்கள் போன்றவற்றிற்காகவே ஒரு பில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி வழங்கப்பட்டது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு இவ்வாறான தவறான அறிக்கைகள் எந்தவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்கப்போவதில்லை என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago