2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இன, மதவாதம் பேசினால் விசேட பொலிஸ் பிரிவு தேடிவரும்

Thipaan   / 2016 நவம்பர் 22 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் செயற்படும் மற்றும் கருத்துகளை வெளியிடுபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக, விசேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் திணைக்களத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொலிஸ் பிரிவு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில், இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்கள் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிராக அரசாங்கமும் பொலிஸாரும் செயற்படுவதில்லை என்ற விசனமும் கவலைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், முரண்பாடுகளை தூண்டும் நோக்கில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிணங்கவே, இந்த விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.  

இன மற்றம் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டி, நாட்டில் மீண்டும் இன வன்முறையொன்றை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, புலனாய்வுத் துறையினர், ஜனாதிபதியிடம் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே, இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .