2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இன்று நள்ளிரவு முதல் பஸ் இல்லை, ரயிலும் இல்லை

George   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

7 வாகன தவறுகளுக்காக அறவிடப்படும் அபராத தொகையை 25,000ஆக அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 34 தனியார் பஸ் சங்கங்கள் ஒன்றிணைந்து, இன்று நள்ளிரவு முதல், சேவைபுறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம், தென் மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம்,
அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, மாகாண முச்சக்கரவண்டி உரிமையார்கள் சங்கம் மற்றும் பாடசாலை சேவை வான் சாரதிகள் சங்கம் ஆகியனவும் இந்த போராட்டத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ரயில் திணைக்கள ஊழியர்களின் 50 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ரயில்வே இடத்தை தனியாருக்கு வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .