2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இன்று கையெழுத்து போராட்டம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரியும், புதைகுழி அகழ்வுப் பணிகளைச் சர்வதேச நிபுணத்துவப் பங்களிப்புடன் முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் தமிழர் வாழ் பகுதிகளில் இன்று கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதன் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.

தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தமது ஒப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .