2026 ஜனவரி 28, புதன்கிழமை

இன்று பனிமூட்டமான வானிலை

Freelancer   / 2026 ஜனவரி 28 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல மாகாணங்களில் பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று குறித்த முன்னறிவிப்புகளை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை மற்றும் காலை வேளைகளில் கடும் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் வீதிகளில் போதிய தெளிவுத்தன்மை குறைவாக இருக்கும் என்பதால் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (a)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X