Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமாதானம், ஒற்றுமைக்குப் பதிலாக, வைராக்கியம் மற்றும் குரோதத்தை வளர்த்துக்கொண்டு, பதவிப் பேராசையில், வடக்கிலுள்ள சாதாரண மக்களின் அபிலாஷைகளைச் சீர்குலைத்துவரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, இந்நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரவித்தார்.
பண்டாரகம பிரதேசத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை சந்தித்து, கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், மேலும் கூறியதாவது,
'வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்நாட்களில், பேயாட்டம் ஆடிவருகின்றார். இந்நாட்டின் நிலம் தொடர்பான யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், வடக்கிலுள்ள இனவாதிகளுடன் ஒன்றிணைந்துகொண்டு, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை நோக்கி, இந்நாடு பயணிக்கும் பாதையைச் சீர்குலைக்க, அவர் முயற்சிக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், இந்த நாட்டைப் பிளவுபடுத்தவோ, நாட்டுக்குள் சமஷ்டி முறையைக் கொண்டுவரவோ, இந்நாட்டிலுள்ள சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சம உரிமைகளுடன் வாழும் நிலைமையை உருவாக்கும் முயற்சியையோ சீர்குலைக்க, ஒருபோதும் இடமளிக்கப்பொவதில்லை என, விக்னேஸ்வரனுக்கு தெளிவாக எடுத்துக்கூறுகிறோம்.
புதிய அரசியலமைப்பொன்றின் கீழ், அனைத்தின மக்களுக்கும் சம உரிைஅ வழங்கப்படும். வடக்கிலும் தெற்கிலும் உள்ள அனைவரும், ஒற்றுமையாக வாழும் சூழல் ஒன்றை, நாம் கட்டாயம் உருவாக்குவோம். வடக்கிலும் தெற்கிலுமுள்ள இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ அல்லது பிரதேசவாதத்துக்கோ, இனி ஒருபோதும் இடமில்லை. எல்.ரீ.ரீ.ஈ.யினரின் எச்சங்களுக்கு, உயிர்கொடுக்கும் நோக்கில் செயற்படும் விக்னேஸ்வரன் போன்றோரின் தேசத்துரோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்தின மக்களும் அணிதிரள வேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .