Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தண்டனைச் சட்டக் கோவைக்குக் கொண்டுவரப்படவிருந்த திருத்தங்களைக் கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நொடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்;றத்தில் வியாழக்கிழமை (17) அறிவித்தார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு மற்றும் தெரிவிக்கப்பட்ட விசனங்களைக் கருதி, இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம், எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று விவாதத்துக்கு எடுக்காது என அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, உள்நாட்டு சிவில் சமூகமும், இதையிட்டு அதிருப்தி தெரிவித்தது.
வெறுப்பேற்றும்; பேச்சுக்கள், இனவாத வன்முறை, முரண்பாடுகள் என்பவற்றைத் தூண்டி விடுவதைக் குற்றச் செயல்களாக ஆக்கும் நோக்கில் கொண்டுவருவதாகக் கூறப்பட்டு, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு சட்டமூலங்களையிட்டு, சிவில் சமூகம், கடந்த (16) வெளியிட்ட கூட்டறிக்கையொன்றில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவைக்குத் திருத்தமாகும்.
இதன்மூலம், இரண்டு வருட சிறைத்தண்டனையை விதிக்கக் கூடிய, 'வன்முறையைத் தோற்றுவித்தல் அல்லது தூண்டுதல்' எனும் புதிய குற்றம் உருவாக்கப்படவிருந்தது. இரண்டாவது சட்டமூலம், இந்தப் புதிய குற்றச் செயலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தேவையான நிபந்தனையைக் கூறுகின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 2(1)(எச்) ஐ பயன்படுத்தித்தான், தமிழ் ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸநாயகத்தை குற்றவாளியாக்க முடிந்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago