2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘இனவாதிகளின் கருத்துக்கு ஏற்றவாறு அரசமைப்பை உருவாக்க முடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இனவாதிகளின் கருத்துக்கு ஏற்றவாறு, அரசமைப்பை உருவாக்க முடியாது என்று, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் ரவி கருணாநாயக்க, மேல் மகாண ஆளுநர் அசாத் சாலியை நேற்று (11), அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.  

இதன்பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,  

புதிய அரசமைப்பு, ஓர் இனத்துக்காகவோ மதத்துக்காகவோ தயாரிக்கப்பட மாட்டாது என்றும் தற்போது, நாட்டுக்கு புதிய அரசமைப்பொன்று தேவையாக இருக்கும் பட்சத்தில், அதைப் பலவந்தமாகக் கொண்டுவரமுடியாது என்றும் அவர் கூறினார்.  

அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன், அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே அது அமையப்பெற வேண்டும் என்றும் எவ்வாறாயினும் ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமையுடன்தான், புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூறிய அவர், இதில் உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.  

இனவாதிகள் தான், இது தொடர்பில் பொய்யான கருத்துகளைக் கூறிவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இலங்கையர் எனும் அடிப்படையில்தான், இந்த அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதைக் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .