2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இன்று ஏழுமலையான் தரிசனம்

Freelancer   / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இரு நாள் புனித யாத்திரையாக திருப்பதிக்கு சென்றுள்ளார்.

நேற்று (23) காலை திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை ஆந்திராவின் துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

திருப்பதி செல்லும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இன்று வெள்ளிக்கிழமை குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இரவு ஓய்வெடுத்த பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசனம் செய்வார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X