2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இன்று நடைபெற்ற முக்கிய சந்திப்பு

R.Maheshwary   / 2022 மே 02 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி  சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிமல் ஸ்ரீ பாலடீ சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, டிரான் அலஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன, பசில் ராஜபக்ஸ மற்றும் ரமேஸ் பத்திரண உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .