Editorial / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லை என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வீடுகளிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ அனைத்து திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றின் இயலளவில் 50 சதவீதத்துக்கு அதிகரிக்காத அளவிலேயே ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இயன்றவரை பொது இடங்களில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago