George / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினரிடம் கூட இல்லாத நவீனரக துப்பாக்கியொன்று போதைபொருள் கடத்தல்காரரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைபொருள் வர்த்தகரான வெலே சுதாவின் கையாள் என்றுத் தெரிவிக்கப்படும் 'பொடி ஜானா' கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதி கொலைசெய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த சந்தேகநபரொருவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்தே இராணுவத்தினரிடம் கூட இல்லாத நவீனரக துப்பாகியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நவீனரக துப்பாக்கி சந்தேகநபருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர.
குறித்த துப்பாக்கி பயங்கரவாத அமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
போதைபொருள் வியாபாரியிடம் இருந்து இவ்வாறான நவீன துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளமை இது முதல் தடவை என பொலிஸார் கூறினர்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025