2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரகசியமாக மக்கள் பேரணி நடவடிக்கையை முன்னெடுக்க ஐ.தே.க திட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு வலியுறுத்தி கொழும்பு வரை முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் பேரணி போராட்டம் தொடர்பில் ஆரம்பிக்கப்படும் தினம், இடம் மற்றும் நேரம் தொடர்பில் நாளைய தினம் அறிவிக்கப்பட்டாலும் குறித்த மக்கள் பேரணி நடவடிக்கை எவ்வாறு இருக்குமென்பது குறித்து முன்னதாக அறிவிக்கப்படாதென்று காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை நாளைய தினம் (5) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறை​வேற்றப்பட்டதன் பின்னர் மக்கள் பேரணி நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் பூராகவும் நாடுபூராகவும் பயணித்து மில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இணைந்து கொழும்புக்குள் நுழையவுள்ளதாகவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனவே கொழும்புக்குள் உள்நுழையும் மக்கள் பேரணியின் பயணம் குறித்து இறுதிவரை தகவல்களை வெ ளியிடாமல் இருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளார்களென

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .