2025 ஜூலை 05, சனிக்கிழமை

இரணைமடு குளத்தில் நீக்கப்பட்ட நினைவுக்கல் மீண்டும் அதே இடத்தில்

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்ட போது, அங்கிருந்து நீக்கப்பட்ட டீ.எஸ்.சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்லை, 24 மணிநேரத்துக்குள் மீண்டும் அவ்விடத்தில் வைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனஆலோசனை வழங்கியுள்ளாரென, கிழக்கு மாகாண அரசாங்க அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மேலும் அதிகாரிகள் சிலர் குறித்த இடத்துக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதற்கமைய, குறித்த இடத்தில் மீண்டும் சேனநாயக்கர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்லை நிறுவும் செயற்பாடுகளை, ஒப்பந்தக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .