2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு உயிர்களை பறித்த இந்தியாவின் தோல்வி

J.A. George   / 2023 நவம்பர் 21 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர் முழுவதும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை, இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதற்கிடையே இரண்டு ரசிகர்கள் விபரீத முடிவை எடுத்துள்ளனர். ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த தேவ் ராஜன் தாஸ் (23) என்ற ரசிகர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

அதேபோல் மேற்கு வங்காள மாநிலம் பெங்குரா பகுதியை சேர்ந்த ராகுல் லோகர் (23) என்ற ரசிகரும்  போட்டி முடிந்த அன்று இரவு தனது அறையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் தோல்வி இரண்டு இளம் உயிர்களை பறித்துள்ளது. ரசிகர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X