2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரண்டு பெண்களையும் உங்களுக்குத் தெரியுமா?

Janu   / 2025 ஜூன் 19 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த படத்தில் உள்ள பெண்கள் இருவர் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால், ​கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு, பொலிஸ் திணைக்களம் பொதுமன்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

2024.03.28 அன்று, ரக்வானை பன்சாரா வீதியில் வசிக்கும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில், ரக்வானை பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியது. அந்தப் பெண்ணின் ஏடிஎம் அட்டையை அவரது வீட்டில் தங்கியிருந்த பெண்ணொருவர் திருடி, அதைப் பயன்படுத்தி ரூ.420,000/= பணம் பெற்றுள்ளதாகவும் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருடிச் சென்றது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட சந்தேக நபர் வசிக்கும் பகுதியை விட்டு அப்பெண் தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது, மேலும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகிறது.

தேடப்படும் சந்தேக நபரின் விவரங்கள்

1. பெயர்:-இத்தகொடகே அப்சரா நிலுஷிகிகா பெரேரா

2. முகவரி:128, ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மாவத்தை, குரானா, நீர்கொழும்பு

3. வயது: 42

4. அடையாள அட்டை இலக்கம்: 836982568v

தொலைபேசி எண்கள் -

*ரக்வானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071-8591394

* ரக்வானை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு ஓஐசி,, 071-8593808

28.03.2024 அன்று, கொடகவெல, கலஹிடிய, பெலவத்த வீதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்குச் சென்ற அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அதன் உரிமையாளருக்குச் சொந்தமான ரூ.110,000/= மதிப்புள்ள 02 தங்க மோதிரங்களைத் திருடிச் சென்றார். ரக்வானை காவல் நிலையத்திற்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் ரக்வானை பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

சந்தேக நபரான இந்த பெண், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊதுபத்திகள் மற்றும் பிற பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்று இதுபோன்ற திருட்டுகளைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் கேட்டுக்கொள்கிறது.

தொலைபேசி எண் -

*   ரக்வானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  071-8591394

* ரக்வானை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு ஓஐசி - 071 - 8593808

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .