2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'இரண்டு வாரங்களுக்குள் புதிய தலைவர் தேவை'

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் திருடர்களை கைதுசெய்தல், அரசியல் பழிவாங்கலுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளாமை, அனாவசிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டமை மற்றும் நாட்டில் ஏற்பட்ட மோதல்களில் உடனடியாக தலையிடாமை உள்ளிட்ட விடயங்களால் கடந்த ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த நிலைமைகள் மாறினால் எதிர்கால அரசியலின் நிலையையும் மாற்ற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .