Freelancer / 2025 ஒக்டோபர் 24 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாயாலும் மூக்காலும் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாண்டித்தாழ்வு, காரைநகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவராவார்.
நேற்று (23) காலை அவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 9.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், முற்பகல் 10.00 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை ஊர்காவற்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago