Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 28 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இரத்த வங்கியினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது கடினம் என்பதால் இரத்தம் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.
கொடையாளர்கள் தேசிய இரத்த வங்கிக்கு வருகைதந்து இரத்ததானம் செய்வதை இலகுபடுத்தும் நோக்கில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்த தானம் வழங்க விரும்புவோர் 011 533 2153 அல்லது 011 533 2154 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு தங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
41 minute ago