2025 மே 07, புதன்கிழமை

இராணுவ வாகனம் மோதி யுவதி பலி

Editorial   / 2024 மே 20 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர்,   திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். 

துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார். 

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X