2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இரு அமைச்சுகளில் மாற்றம்

Editorial   / 2019 ஜனவரி 25 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவுக்கு, அந்த அமைச்சுக்கு மேலதிகமாக, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் கிடைத்துள்ளது.

அத்துடன், உல்லாசப் பயணத்துறை இராஜாங்க அமைச்சராகவுள்ள ரஞ்சித் அலுவிஹாரவுக்கு, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சும் கிடைக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவால், இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .