Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 09 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
"மலையக மக்களின் இருப்பை சிதைத்து, வாழ்வாதாரத்தை அழித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்துக்கொள்வதற்கான நகர்வையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக" ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இம்முயற்சியை முறியடித்து, எம்மக்களின் இருப்பை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கு மலையக இளைஞர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராகவே இருக்கின்றது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
பால் உற்பத்திய அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் என்ற போர்வையில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகத்தின்கீழுள்ள தோட்டக் காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடப்போவதில்லை. நாகஸ்தன்ன தோட்டம், கந்தலோயா தோட்டம், இரத்தினபுரியில் சில தோட்டங்களிலும் காணி அபகரிப்பு இடம்பெறவே போகின்றது. இது தொடர்பான தகவல்களையும், எச்சரிக்கைகளையும் நாம் ஏற்கெனவே விடுத்திருந்தோம். ஆனால் ஆளுங்கட்சியில் உள்ள மலையக பிரதிநிதிகள் மறுப்பு தெரிவித்தனர். பிரச்சினையை திசை திருப்பினர்.
தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் எமது மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட
வேண்டும். இதற்கான நடவடிக்கையை நல்லாட்சியின்போது நாம்
முன்னெடுத்தோம். தோட்டத் தொழிலாளர்களை சிறுத்தோட்ட
உரிமையாளர்களாக ஆக்குவதற்கான திட்டத்தையும் வகுத்தோம்.
இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்திருக்கலாம். அதனைவிடுத்து எம்மவர்களை தொடர்ந்தும் நாட்கூலிகளாக வைத்திருப்பதற்கும், அடிமைகளாக நடத்துவதற்குமே முயற்சி எடுக்கப்படுகின்றது.
மாட்டுப் பண்ணை, கோழிப்பண்ணை உள்ளிட்டவற்றில் எம்மவர்கள் வேலை செய்ய
வேண்டும், அவர்கள் உரிமையாளர்களாக முடியாது என்பதே ஆளுந்தரப்பின்
நோக்கம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .